இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான Sikkim-ல் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப் பெருக்கத்தை அடுத்து 23 ராணுவ வீரர்களை காணவில்லை என்றும், தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிக்கிம் தலைநகர் Gangtok-ல் உள்ள சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டதாகவும், வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையும் இந்த வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்டது.
Gangtok-ல் இருந்து 150 கிலோமீட்டர் வடக்கே சீனாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அங்கு பெய்த தொடர் கனமழையே காரணம் என்று நிபுணர்கள் கூறினர்.
இதனால் இப்பகுதியில் வசிக்கும் சுமார் 15,000 பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும், டீஸ்டா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரத்தில் உள்ள 8 பெரிய பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடைவிடாத மழை மற்றும் இடியுடன் கூடிய புயல்கள் அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ளன என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.