ஈஸ்ட் கோஸ்ட் நிலத்தடி நடைபாதையில் ஏற்பட்ட வெள்ளம்…!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் நிலத்தடி நடைபாதை திடீரென வெள்ளத்தில் மூழ்கியதாக தகவல் வெளியாகியது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், தண்ணீர் பம்ப் மூலம் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி நிலைமை விரைவாக சரி செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து போக்குவரத்தை திசை திருப்ப அவசர மீட்புக் குழுவொன்று நிறுத்தப்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கனமழையால் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் 10 நிமிடங்களில் மழை நீர் வடிந்ததாக தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (நவம்பர் 13) இடம்பெற்றது.

நேற்று (நவம்பர் 16) மீண்டும் கனமழை பெய்ததால் அதிகாரிகள் அங்கு சென்று நிலைமையை கண்காணித்தனர்.ஆனால் அங்கு வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.