சிங்கப்பூரில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பல பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தேசிய நீர் வாரியம் (PUB) சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்த விவரங்களை அதிகாரத்துவ ‘எக்ஸ்’ தளத்தில் அமைப்பு வெளியிட்டிருந்தது.

காலை 8 மணி முதல் 9.15 மணி வரை சுமார் 20 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

சன்செட் வே,ஜூ சியட் அவென்யூ மற்றும் உலு பாண்டான் சாலை ஆகியவற்றை குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது தவிர்க்குமாறு அமைப்பு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நெட்டிசன்கள் பலர் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

கனமழையை தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தேவை இல்லாமல் வெளியில் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.