பண்டைய வியட்நாமின் உலக பாரம்பரிய சுற்றுலாத்தலமான Hue நகரத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் படகுகளில் செல்கின்றனர்.
மத்திய மாகாணமான குவாங் ட்ரையில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர் என்றும், மூன்று பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் சில பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் வியட்நாமும் அடங்கும்.
வியட்நாமில் இந்த ஆண்டு மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 136 பேர் உயிரிழந்துள்ளனர்.காணாமலும் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இது போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.