சாங்கி விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம்!!

சாங்கி விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம்!!

சிங்கப்பூரில் பல இடங்களில் கடும் மழை பெய்யும் என்றும் அதனால் திடீர் வெள்ளம்u ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அபாய எச்சரிக்கையை தேசிய தண்ணீர் அமைப்பான PUB X தளத்தில் தெரிவித்திருந்தது.

சிங்கப்பூரில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாங்கி விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் நியூயார்க் செல்லும் விமானம் மூன்றாம் முனையத்திலிருந்து முதலாம் முனையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.அந்த விமானம் தாமதமாக புறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பலத்த மழை மற்றும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பயணிகளை விமானத்தில் ஏற்ற முடியவில்லை என்று சாங்கி விமான நிலையம் தெரிவித்தது.

சந்தோசாவில் LIV கோல்ப் இரண்டாவது சுற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி 12.45 மணிக்கு முன் தொடங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 12.10 மணி வரை மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.