சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம் ஏற்படலாம்!!
சிங்கப்பூரில் ஜனவரி மாதம் 10ஆம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை அதிக அளவு மழை மற்றும் காற்று வீசும் என தேசிய தண்ணீர் PUB தெரிவித்துள்ளது.
சில நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,கனமழையின் காரணமாக கால்வாய்களில் வெள்ள நீர் ஓடும் அபாயம் இருப்பதாகவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் தினசரி குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 25 டிகிரி செல்சியஸாக குறையும் என்று கூறியது.
வெள்ள பாதுகாப்பு ஆலோசனைகளை தேசிய தண்ணீர் அமைப்பு facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
PUB Flood Alert telegram channel, MYENV போன்ற இணைய செயலிகள் மூலம் மழை மற்றும் வெள்ளம் குறித்த எச்சரிக்கைகளை அறியலாம்.
Follow us on : click here