வடக்கு வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவரை காணவில்லை என்றும் பேரிடர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Yen Bai, Thai Nguyen மற்றும் Tuyen Quang மாகாணங்களில் கனமழை பெய்ததால் டஜன் கணக்கான வீடுகள் மற்றும் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக Hanoi-ஐ தளமாகக் கொண்ட பேரிடர் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
தெருக்களில் சூழ்ந்த வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வியட்நாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 98 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும், 103 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
புவி வெப்பமடைதலால் வானிலை தீவிரமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.