சிங்கப்பூரில் முதல் அனைத்துலக வெப்பச் சுகாதார தகவல் கட்டமைப்பு மையம்!!

சிங்கப்பூரில் முதல் அனைத்துலக வெப்பச் சுகாதார தகவல் கட்டமைப்பு மையம்!!

சிங்கப்பூரின் அனைத்து உலக வெப்ப சுகாதார தகவல் கட்டமைப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

இத்தகைய மையம் முதல் முறையாக தென்கிழக்கு ஆசியாவில் அமைக்கப்படுகிறது.

அந்த மையத்தில் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதோடு அதன் கொள்கைகளையும் மேற்கொள்ள சிங்கப்பூர் ஆய்வாளர்கள் உதவுவார்கள்.

முதல் தென்கிழக்காசிய கருத்தரங்கில் அனைத்துலக வெப்ப சுகாதார தகவல் கட்டமைப்பு மையம் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய மையம் தேசிய பல்கலைக்கழகத்தின் Heat Resilience and performance நிலையத்தில் அமைக்கப்படும்.

மேலும் அந்த மையத்தில் வெப்பத்தை ஆராய்ச்சி செய்ய பிரிவும் பருவநிலையை பிரதிபலிக்கும் பாவனை வசதிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.