இங்கிலாந்தில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த முதல் குழந்தை…!!!

இங்கிலாந்தில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த முதல் குழந்தை...!!!

இங்கிலாந்தில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பெண் ஒருவர் ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

அத்தகைய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இங்கிலாந்தில் பிறந்த முதல் குழந்தை இவர்தான்.

இந்த தகவலை லண்டனில் உள்ள குயின் சார்லோட் மற்றும் செல்சியா மருத்துவமனை அறிவித்தது.

பிப்ரவரி 27 ஆம் தேதி பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு ஏமி என்று பெயரிடப்பட்டது.

கிரேஸ் தனது சகோதரியிடமிருந்து அறுவை சிகிச்சை மூலம் கருப்பையைப் பெற்றார்.

36 வயதான கிரேஸ், மேயர்-ரோகிடான்ஸ்கி-குஸ்டர்-ஹவுசர் என்ற அரிய மருத்துவ நிலை காரணமாக கருப்பை இல்லாமல் பிறந்தார்.

25 வருட ஆராய்ச்சியின் விளைவாக இந்த குழந்தை பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உலகளவில் இதுவரை 100க்கும் மேற்பட்ட கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

உலகின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை 2013 இல் ஸ்வீடனில் செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சையின் விளைவாக உலகளவில் சுமார் 50 ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளன.

தனக்கு கிடைத்த இந்த தாய்மை பாக்கியத்தை எண்ணி கிரேஸ் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார்.

இது ஒரு பெரிய ஆசீர்வாதம் என்றும், குழந்தை பெற முடியாதவர்களுக்கு சிகிச்சையின் மூலம் எதிர்காலத்தில் குழந்தை பெற இது மற்றொரு வாய்ப்பாக இருக்கும் என்றும் கிரேஸ் உற்சாகத்துடன் கூறினார்.