புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடந்த முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடந்த முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட கழக மருத்துவ அணி மற்றும் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி இணைந்து Indian Medical Association (IMA) உதவியோடு உயிர் காக்கும் முதலுதவி (Basic Life Support BLS) சிகிச்சைக்கான 5000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களிடையே முதலுதவியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துறைத்த மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.டாக்டர் வை முத்துராஜா MBBS ஆகியோர் தலைமை வகித்து விழிப்புணர்வு நிகழ்வை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு கே கே செல்லபாண்டியன் அவர்கள் மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் திரு அண்ணாமலை ரகுபதி அவர்கள் நகரக் கழக செயலாளர் திரு ஆ.செந்தில் அவர்கள் கழக வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் திரு டாக்டர் முத்துகருப்பன் அவர்கள், தெற்கு மாவட்ட மருத்துவமனை அமைப்பாளர் திரு டாக்டர்.சுதர்சன் அவர்கள், ஒருங்கிணைந்த மருத்துவ அணியின் துணை அமைப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.