கண்களை கலர்ஃபுல்லாக்கும் வானவேடிக்கை…!!! சிங்கப்பூரில் எங்கெங்கு காணலாம்…??

கண்களை கலர்ஃபுல்லாக்கும் வானவேடிக்கை...!!! சிங்கப்பூரில் எங்கெங்கு காணலாம்...??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நாளை வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் அதை வரவேற்க மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

சிங்கப்பூரில் பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

அதில் கண்களை கவரும் பல வானவேடிக்கைகள் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

இதைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

மக்கள் எங்கெங்கு வானவேடிக்கையை கண்டு ரசிக்கலாம்?

மெரினா பே

மெரினா பேவில் 30 நிமிட வானவேடிக்கையை மக்கள் கண்டு ரசிக்கலாம்.

மக்கள் கூட்ட நெரிசலை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை நாடலாம்.

https://www.gowhere.gov.sg/onecountdown/

செந்தோசா

மக்கள் கொண்டாட்டத்திற்காக பலவான் கடற்கரையில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.

மக்கள் கூட்ட நெரிசல் குறித்து அறிய: https://www.gowhere.gov.sg/onecountdown/

சிங்கப்பூர் விளையாட்டு நடுவம்

மீடியாகார்ப்பின் Let’s celebrate 2025 புத்தாண்டு நிகழ்ச்சிக்கான 15 நிமிட வானவேடிக்கையை கண்டு ரசிக்கலாம்.

மக்கள் கூட்ட நெரிசல் குறித்து அறிய: https://www.gowhere.gov.sg/onecountdown/

ஆர்ச்சர்ட் ரோடு,சமர்செட் ரோடு

புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சந்தைகள் மற்றும் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

கிளார்க் கீ

மக்கள் ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சியை காணலாம்.

குடியிருப்பு பகுதிகள்

புத்தாண்டு கொண்டாட்டங்கள் 17 குடியிருப்பு பகுதிகளில் இடம்பெறும்.

அவற்றில் சில இடங்களில் வானவேடிக்கைகளை மக்கள் கண்டு ரசிக்கலாம்.

குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ONE countdown 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.

அனைத்து வயதினரும் நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக மன்றங்கள், குடியுரிமைக் குழுக்கள், சுற்றுப்புறக் குழுக்கள் போன்றவற்றை அணுகி நிகழ்ச்சி குறித்த கூடுதல் விவரங்களை பொதுமக்கள் அறியலாம்.