விமானத்தில் தீ…… பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டார்களா?

ஏர் சீனா விமானத்தின் இடது இயந்திரத்தில் தீப்பற்றி கொண்டது. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் ஓடுபாதையில் நின்று கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் நிகழ்ந்தது. CA403 விமானத்தில் மாலை 4 மணியளவில் புகை வந்ததாக விமான நிலையம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அதையடுத்து CAAS விடம் விமானம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தது.

அதனிடம் அவசரநிலையை அறிவித்தது. முன்னுரிமை தரையிறக்கத்தையும் கேட்டு கொண்டது.

விமானத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது.சுமார் மாலை 4.15 மணியளவில் ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதில் இருந்த 146 பயணிகளும், ஒன்பது ஊழியர்களும் பத்திரமாக அவசர ஸ்லைடு வழியாக வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தின் இடது இயந்திரத்தில் பற்றி கொண்ட தீயை அணைத்தனர்.

ஒரு சிலருக்கு சிறிய காயங்களும், சுவாச பிரச்சனையும் ஏற்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று CAAS கூறியது.

இதனால் சாங்கி விமான நிலையத்தின் ஓடுபாதை சுமார் மூன்று மணி நேரம் மூடப்பட்டது.

சோதனைகளுக்கு பின்னர் சாங்கி விமான நிலையத்தின் மூன்றில் ஒரு ஓடுபாதை இரவு 7 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

ஓடுபாதை மூடப்பட்டிருந்த சமயத்தில் இந்தோனேசியாவின் படாமிற்கு ஒரு விமானம் திருப்பி விடப்பட்டதாகவும் CAAS தெரிவித்தது.