ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!!

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!!

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.விமான நிலையம் அருகே துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இதனால் விமான நிலையத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

இன்று நள்ளிரவு வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது.

ஜெர்மனியின் Frankfurt நகருக்கும் பிரான்சின் பாரிஸ் நகருக்கும் சில விமானங்களை திருப்பி விட்டதாக நிறுவனம் கூறியது.

இதன் காரணமாக 8 பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான மாற்று பயண ஏற்பாடு ,ஹோட்டல் போன்ற உதவிகள் வழங்கப்படும்.

Cathay Pacific நிறுவனம் அதன் விமானப் பயணங்களை ரத்து செய்தது.

ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டதால் குறைந்தது 1350 விமானப் பயண ங்கள் ரத்து செய்யப்படலாம் என்று Flightradar24 இணையத்தளம் கணித்துள்ளது.