நிக்கல் உருக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலி!! தொழிலாளர்கள் போராட்டம்!!

டிசம்பர் 27ஆம் தேதி அன்று இந்தோனேசியாவில் உள்ள நிக்கல் உருக்கும் ஆலையின் வளாகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 23ஆம் தேதி அன்று அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்தவர்களில் 8 பேர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உருக்கு ஆலைகளை சிறப்பாக பராமரித்தல், சீனாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்தோனேசிய மொழியை கற்க வேண்டும் உள்ளிட்ட 23 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

இந்த 23 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தொழிற்சங்கங்கள் காவல்துறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொழிலாளர்களின் உயிரை விட உற்பத்தி முக்கியமில்லை என்று அவர்கள் முழக்கமிட்டனர்.