ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!!

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்...!!!

சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64, பிளாக் 664B இல் உள்ள வீடு ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் கட்டிடத்தின் 16வது மாடியில் நடந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த குடிமை தற்காப்புப் படையினர், வாளியைக் கொண்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

வீட்டில் இருந்த சமையலறைப் பொருட்களில் இருந்து தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, பயன்பாட்டில் இல்லாதபோது மின்சாரத்தை நிறுத்தி வைக்கும்படி அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.