புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!!

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!!

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த சம்பவம் மார்ச் 22 ஆம் தேதி காலை சுமார் 11.50 மணியளவில் SMRT பேருந்து சேவை எண் 972 இல் தீப்பற்றியது.

பெட்டிர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தைக் கடந்து செல்லும்போது பேருந்தின் இயந்திரத்திலிருந்து புகை வருவதை ஓட்டுநர் கவனித்ததாக 8 World ஊடகத்திடம் SMRT கூறியது.

பேருந்தில் இருந்த 19 போரையும் வெளியேறுமாறு ஓட்டுநர் கூறியதாக SMRT கூறியது.

தீயை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அணைத்தது.

இச்சம்பவத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை என்றும் பயணிகள் இன்னொரு பேருந்தில் ஏறினர்.

பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SMRT கூறியது.

எப்படி தீப்பற்றியது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.