மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!!

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் சுபாங் ஐயா பகுதியில் உள்ள Putra Heights குடியிருப்பு பகுதியில் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 8 மணியளவில் எரிவாயு குழாய் கசிந்ததால் தீ விபத்து நேர்ந்தது .அந்த தீயானது வானை தொடும் உயரத்திற்கு கொளுந்துவிட்டு எரிவதை சமூக ஊடகத்தில் வேகமாக பரவப்படும் வீடியோவில் காணலாம்.
தீயை அணைப்பதற்கு தற்போது 78தீயணைப்பாளர்கள் ஈடுபட்டு வருவதாக MalayMail ஊடகம் கூறியது.
காலை 10 மணி நிலவரப்படி 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் தற்போதைக்கு இல்லை.
குடியிருப்பு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டது என்று The Star ஊடகம் கூறியது.
தற்போது எரிவாயு குழாய் அடைக்கப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.
அந்த தீயானது 500 மீட்டர் நீளம் வரை தொட்டதாகவும் பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து கூட அதை பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சிக்கியுள்ள குடியிருப்பாளர்களை மீட்பதில் தீயணைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மஸ்ஜித் புத்ரா ஹைட்ஸில் இருக்கும் தற்காலிக நிவாரண மையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan