கிராஞ்சி கிரசண்ட்டில் கொளுந்து விட்டு எரியும் தீ!! பொதுமக்களுக்கு வேண்டுகோள்!!

கிராஞ்சி கிரசண்ட்டில் கொளுந்து விட்டு எரியும் தீ!! பொதுமக்களுக்கு வேண்டுகோள்!!

சிங்கப்பூரில் 11 கிராஞ்சி கிரசண்ட்டில் பிப்ரவரி 19 ஆம் தேதி(இன்று) காலை சுமார் 10.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வந்தபோது தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

எரிந்து கொண்டிருந்த தீயை அணைப்பதற்கு 6 தண்ணீர் குழாய்கள் மற்றும் ஒரு இயந்திரமும் பயன்படுத்தப்படுகின்றன.

கிடங்கில் இருந்த கழிவுப்பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன.கிடங்கின் நீளம் மற்றும் அகலம் சுமார் 50 மீட்டர்.

SGSecure செயலி பயனாளர்கள்,M1,StarHub,SingTel கைத்தொலைபேசி பயனாளர்கள் அந்த இடத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் மாற்று பாதைகளில் செல்லுமாறு குடிமைத் தற்காப்புப் படை கேட்டுக்கொண்டுள்ளது.