தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!!
தென்கொரியாவில் சியோங்நாம் நகரில் உள்ள வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
அந்த கட்டிடத்தில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகமான Yonhap செய்தி நிறுவனம் கூறியது.
தீ விபத்து பற்றிய தகவல் அறிந்தவுடன் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
சுமார் 260 க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஈடுபடுத்தப்பட்டனர்.
அந்த கட்டிடத்தில் இருந்தவர்களில் 240 க்கும் அதிகமானவர்கள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டனர்.
மேலும் 70 பேர் தங்களாகவே வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
கட்டிடத்தின் அடித்தளத்தில் 30 பேர் சிக்கி இருந்ததாகவும், பின்னர் அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக The Korea Herald செய்தி நிறுவனம் கூறியது.
சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்தில் சிக்கியவர்கள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் யாருக்கும் கடுமையான காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
Follow us on : click here