ஆஸ்ரேலியாவின் யூத வழிபாட்டுத்தலத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!!2 பேர் மீது சந்தேகம்…!!!!

ஆஸ்ரேலியாவின் யூத வழிபாட்டுத்தலத்தில் ஏற்பட்ட தீ விபத்து...!!!2 பேர் மீது சந்தேகம்...!!!!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள யூதர்களின் வழிபாட்டுத் தலத்திற்கு இருவர் வேண்டுமென்றே தீ வைத்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இன்று அதிகாலை அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

இந்த தீ விபத்தில் வழிபாட்டு கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

யூதர்களுக்கு எதிரான கருத்துக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை என்று கூறியுள்ளார்.

பிரதம மந்திரி அல்பனீசி,
விக்டோரியா காவல்துறையிடம் மாநில பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு குறித்து பேசப்படும் என்று கூறியுள்ளார்.

வழிபாட்டுத் தலத்திற்குள் தீ பரவுவதற்கான பொருளை இரண்டு பேர் பயன்படுத்தியதை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்துள்ளார்.

தாக்குதலுக்கான நோக்கம் அறியப்படவில்லை என்றும், அது குறித்த விசாரணையானது தொடர்ந்து நடைபெறும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

Follow us on : click here ⬇️