காலாங்-பாய லேபார் விரைவுச் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து..!!!

காலாங்-பாய லேபார் விரைவுச் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து..!!!

சிங்கப்பூர்: காலாங்-பயா லேபார் விரைவுச்சாலை சுரங்கப்பாதையில் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 2) கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சுரங்கத்தின் தண்ணீர் தெளிப்பான்கள் தீயை அணைக்க தானாகவே செயல்பட்டன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு இரவு 9 மணியளவில் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

பார்ட்லி ரோடு ஈஸ்ட் வெளியேறிய பிறகு இருக்கும் தெம்பனிஸ் விரைவுச்சாலைக்கு செல்லும் சுரங்கப்பாதையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே சுரங்கத்தின் தண்ணீர் தெளிப்பான்கள் காரின் என்ஜின் பெட்டியில் மூண்ட தீயை அணைத்தது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை,

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.