Iraq-ன் Nineveh மாகாணத்தில் உள்ள Hamdaniya மாவட்டத்தில், புதன்கிழமை அன்று நடைபெற்ற திருமண விருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 10:45 மணியளவில் கட்டிடம் தீப்பிடித்ததாகவும், சம்பவத்தின் போது நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்ததாகவும், அந்த இடத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
கொண்டாட்டத்தின் போது வெடித்த பட்டாசுகள், இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று கூறினர்.
முதற்கட்ட அறிக்கைகள், கட்டிடம் தீப்பற்றக்கூடிய கட்டுமானப் பொருட்களால் கட்டப்பட்டது என்றும், அதன் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்தது என்றும் தெரிவித்தன.
தீயணைப்பு வீரர்கள் எரிந்த கட்டிடத்தின் இடிபாடுகளின் மீது ஏறிச் சென்று, இந்த தீ விபத்திலிருந்து உயிர் தப்பியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.