நகங்களுக்கு வண்ணம் தீட்டும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பூகிஸ் தெருவில் செயல்பட்டு வரும் நெயில் பாலிஷ் கடையில் திடீரென தீப்பிடித்தது.
இந்த கடையானது பிளாக்கின் மூன்றாவது மாடியில் உள்ளது.
பொதுமக்கள் தீயை அணைத்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடையில் தீ பற்றிய சம்பவம் தொடர்பான காணொளியானது டிக் டாக்கில் வெளியானது.
அதில் நடைபாதை முழுவதும் புகையால் நிரம்பி இருப்பதை காணலாம்.
கடையில் இருந்த விளக்கு தீப்பிடித்ததில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
நெயில் பாலிஷ் கடைக்கு அருகில் உள்ள கடைகளில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருந்தனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சிவில் பாதுகாப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னர் பொதுமக்களில் ஒருவர் தீ அணைக்கும் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
Follow us on : click here