நவம்பர் 3ஆம் தேதி (இன்று) ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு வடக்கில் உள்ள Gilan மாகாணத்தின் Langarud நகரில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்தனர் என்று The judiciary’s Mizan Online news website முன்னதாக தெரிவித்திருந்தது.இந்நிலையில் தற்போது இறப்பு எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாகவும்,மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளாதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.காயமடைந்தவர்களில் 4 பேர் உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து மறுவாழ்வு மையத்தின் மேலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தது.மாகாணத்தின் தலைமை நீதிபதி எஸ்மாயில் சதேகி இந்த தீ விபத்து குறித்து விசாரித்து வருகிறார்.