வேலை இழந்தோருக்கு Skillsfuture திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் Skillsfuture திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் 5,000 வெள்ளி அல்லது அதற்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால் பண உதவிக்கு தகுதியுடையவர்கள்.
ஆட்குறைப்பு மற்றும் நோய் அல்லது காயம் காரணமாக வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நிதி உதவிக்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
பணியாளர்களுக்கு மொத்தம் 6,000 வெள்ளி வரை வழங்கப்படும்.
வேலையின்மையின் முதல் மாதத்தில் $1,500 செலுத்தப்படுகிறது.
பின்னர் ஒவ்வொரு மாதமும் படிப்படியாக அளவு குறையும்.
வேலை கிடைத்தவுடன் பணம் கொடுப்பது நிறுத்தப்படும்.
இத்திட்டத்தில் தகுதி பெற சிங்கப்பூர் குடிமகனாக இருந்து 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவராக இருக்க வேண்டும்.
கடந்த ஒரு வருடத்தில் மாத வருமானம் 5000 வெள்ளிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
தங்கும் வீட்டின் மதிப்பு ஆண்டிற்கு 25000 வெள்ளிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
வேலை இழந்து குறைந்தது ஒரு மாதமாகி இருக்க வேண்டும்.
ஒரு வருடத்தில் குறைந்தது ஆறு மாதம் வேலையில் இருந்திருக்க வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டு திட்டத்தில் இருந்து எந்த ஒரு பண உதவியும் பெற்றிருக்கக் கூடாது.
மேற்கண்ட தகுதிகள் அனைத்தும் உடையவராக இருந்தால் அவர் பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஆதரவு திட்டத்தின் கீழ், 6 மாத காலத்திற்கு உதவிகளை பெறலாம்.
மேலும் இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 60,000 ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here