பங்களாதேஷிற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக வழங்கப்படும் நிதி உதவி...!!!
சிங்கப்பூர்: பங்களாதேஷின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $50,000-ஐ நன்கொடையாக வழங்க உள்ளது.
இந்த நிதியானது அவசரகால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கவும் பயன்படுத்தப்படும்.
பங்களாதேஷ் ரெட் கிரசண்ட் சொசைட்டி (BDRCS) மூலம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய உதவி மற்றும் நிவாரணம் வழங்க உள்ளது.
பங்களாதேஷ் ரெட் கிரசண்ட் சொசைட்டி மற்றும் IFRC உடன் இணைந்து சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பங்களாதேஷின் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், கூடுதல் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.
கடுமையான வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் இடம்பெயர்வுகள் குறித்து சிங்கப்பூர் வறுத்தமடைவதாகவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் மக்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற விரும்புவதாகவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. பெஞ்சமின் வில்லியம் கூறினார்.
பங்களாதேஷ் நிவாரண முயற்சிகளுக்கு மேலும் உதவுவதற்காக பொது நிதி திரட்டும் இயக்கத்தையும் சங்கம் தொடங்கியுள்ளது.
நிதி சேகரிப்பு திட்டமானது இம்மாத இறுதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here