குழந்தை பராமரிப்பு இல்லத்திலிருந்து வெளியேறும் இளைஞர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு..

குழந்தை பராமரிப்பு இல்லத்திலிருந்து வெளியேறும் இளைஞர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு..

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குழந்தைகள் இல்லம் அல்லது வளர்ப்பு பராமரிப்பலிருந்து வெளியேறும் இளைஞர்கள் நிதி உதவி பெறுவது எளிதாகிறது.

அவர்களின் மீது அக்கறை கொண்ட சமூகம், குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் குடும்பங்களில் சேர முடியாத 17 முதல் 21 வயது வரையிலான வளர்ப்பு இளைஞர்களுக்கான ஆதரவை வலுப்படுத்தி இருக்கிறது.

அந்த இளைஞர்களின் பெற்றோர் இறந்து இருக்கலாம், சிறையில் இருக்கலாம் அல்லது தங்கள் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் இருக்கலாம்.

பெரும்பாலும் இது போன்ற சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகள் அவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதி உதவி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு ஃபாஸ்டரிங் ஓபன் ஹவுஸில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நிதி உதவி இளைஞர்கள் உயர்கல்வி முடித்து முழுநேர வேலை கிடைக்கும் வரை வீட்டு மற்றும் அன்றாட செலவுகளை கவனித்துக்கொள்ள உதவுகிறது.

இளைஞர்கள் தனியாக வாழ வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

முதற்கட்டமாக 3 அனாதை இல்லங்களில் நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

 

Follow us on : click here ⬇️