சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் பகுதியில் நடந்த சண்டையில் 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 13 இல் உள்ள கழக பிளாக் 182 இல் நேற்று காலை இந்த சம்பவம் நடந்தது.
Sheng Siong சூப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி கொண்டிருக்கும் போது கூச்சலிடும் சத்தம் கேட்டு அங்கு சென்று நிலைமையைப் பார்க்க சென்றதாக இணையவாசி ஒருவர் sgfollowsall எனும் சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஒரு கும்பல் சண்டையிட்டு கொண்டிருப்பதைக் கண்டதாக பலர் கூறினார்கள்.
இந்த சம்பவத்தில் ஒருவர் கீழே விழுந்ததாக கூறினர்.
அவரை இன்னொருவர் கத்தியால் குத்தியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அதன் பின் அந்த கும்பல் அங்கிருந்து கெளம்பி விட்டதாக தெரிவித்தனர்.
காயமடைந்த இரண்டு நபர்களுக்கு அருகே இரு பெண்கள் காணப்பட்டனர்.
நவம்பர் 11-ஆம் தேதி அதிகாலை சுமார் 12.55 மணிக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது.
டான் டொக் செங் மருத்துவமனைக்கு ஒருவர் அனுப்பப்பட்டதாக கூறியது.
மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டதாக Channel 8 செய்தியிடம் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.
ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்ததாக 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். மேலும் மருத்துவமனைக்கு சென்ற பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.