FIFA உலகக் கோப்பை தகுதி சுற்று!! சிங்கப்பூரை வீழ்த்திய தென் கொரியா!!

FIFA உலகக் கோப்பை தகுதி சுற்று!! சிங்கப்பூரை வீழ்த்திய தென் கொரியா!!

ஜூன் 6-ஆம் தேதி(நேற்று) சிங்கப்பூருக்கும்,தென் கொரியாவுக்கும் இடையே FIFA உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று நடந்தது.

நடந்த இப்போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் தென் கொரியாவிடம் தோற்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 புள்ளியில் தென் கொரியா முன்னிலை வகித்தது.

போட்டியின் கடைசி பாதியில் 3 நிமிடங்களில் தென் கொரியா மூன்று கோல்கள் அடித்து சிங்கப்பூரை வீழ்த்தியது.

இப்போட்டி நேற்றிரவு தேசிய விளையாட்டு மைதானத்தில் சுமார் 8 மணியளவில் தொடங்கியது.

இப்போட்டியைக் காண கிட்டத்தட்ட 40,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.

FIFA உலக வரிசையில் சிங்கப்பூர் 155- வது இடத்தில் உள்ளது. தென் கொரியா 23-வது இடத்தில் உள்ளது.