FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!!

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!!

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காற்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியில் சிலி மற்றும் கொலம்பியாவுக்கு எதிரான போட்டிகளில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாட மாட்டார்.

ஜூலை மாதம் நடந்த கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் கொலம்பியாவுடன் அர்ஜென்டினா அணி மோதியது.இப்போட்டியில் அர்ஜென்ட்டினா கொலம்பியா அணியைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றது.

இப்போட்டியில் மெஸ்ஸிக்கு கணுக்கால் தசைநாரில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திலிருந்து அவர் தொடர்ந்து மீண்டு வருவதாக சின்ஹீவா தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 5-ஆம் தேதி அர்ஜென்டினா சிலியை பியூனஸ் அயர்ஸிலும், ஐந்து நாட்களுக்கு பிறகு கொலம்பியாவை பாரன்குவிலாவிலும் எதிர்கொள்ளும்.

அர்ஜென்டினா தற்போது தென் அமெரிக்கா தகுதி சுற்றில் 6 ஆட்டங்களில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் அர்ஜென்டினா உள்ளது.