FIFA உலகக் கோப்பைப் போட்டி!! சிங்கப்பூர் vs தென் கொரியா!!

FIFA உலகக் கோப்பைப் போட்டி!! சிங்கப்பூர் vs தென் கொரியா!!

ஜூன் 6- ஆம் தேதி (இன்று) FIFA உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் மோதுகிறது.

தேசிய விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது.

இப்போட்டியைக் காண சுமார் 50,000 ரசிகர்கள் கண்டு களிக்க வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் அணியைச் சேர்ந்த Safuwan Baharudin இப்போட்டி குறித்து ஜூன் 5-ஆம் தேதி நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

” ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து உற்சாகம் தரும்போது எங்களை சிறப்பாக விளையாட ஊக்குவிக்கும்” என்று அவர் கூறினார்.

தென் கொரியா அணியைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திரமான Son Heung-min இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்போட்டியை meWATCH, மீடியாகார்ப் Entertainment YouTube தளங்களில் Live – இல் கண்டு களிக்கலாம்.