பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!!

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!!

இந்தியாவின் கொல்கத்தாவில் 33 வயதுடைய பயிற்சி மருத்துவப் பெண் பாலியல் வன்கொடுமை உள்ளாகி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது.

வேலையிடப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு மருத்துவர்களுக்கான தேசிய பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர்களின் பணி நிலைமையை முழுமையாக சீரமைத்து தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்தை தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த வாரம் சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாதம் 22-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.