இந்தோனேஷியாவில் தாம் பெற்ற 11 மாதம் குழந்தையை ஆன்லைனில் விற்பனை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதுடைய நபர் மேற்கு ஜக்கர்த்தாவில் உள்ள Tangreng பகுதியில் கைது செய்யப்பட்டார்.அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட RA பெயர் குறிப்பிடப்படவில்லை.
குழந்தையை விற்ற பணத்தை வைத்து தனது சொந்த தேவைகளுக்காகவும், சூதாட்டத்திற்காகவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
குழந்தையை பணம் கொடுத்து வாங்கியவர்கள் ஆள்கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்களாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அக்டோபர் மாதம் முதலாம் தேதி காவல்துறை கவனத்திற்கு வந்ததாக தெரிவித்தது.
குழந்தையின் தாயார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தையைத் தேடியுள்ளார்.குழந்தை காணவில்லை என்றவுடன் பதற்றமடைந்த தாய் RA யிடம் கேட்டுள்ளார்.
பலமுறை கேட்டும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.அதன்பின் குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டார்.உடனே குழந்தையின் தாய் காவல்துறை நிலையத்திற்கு RA-யை அழைத்து சென்று புகார் அளித்தார்.