சிங்கப்பூரில் கேலாங் சிராய் சந்தை நோன்பு மாதம் தொடங்கும் முதல் நாளிலிருந்து சந்தை செயல்பட தொடங்கும்.
இந்த முறை நோன்பு மாதம் தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு சந்தை தொடங்கப்படும். இதன் மூலம் மக்கள் அங்கு சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
சந்தை மார்ச் மாதம் 17-ஆம் தொடங்கி 36 நாட்கள் செயல்படும். இதில் 700 கடைகள் இடம் பெற எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 150 உணவு கடைகள் ஆகும். இதே சந்தையில் கடந்த ஆண்டு 70 கடைகள் மட்டுமே இடம்பெற்றன.
கேலாங் சிராய் சந்தை நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.இந்த ஆண்டு மத்திய தரைக் கடல் மையமாகக் கொண்டு பொருட்கள் உருவாக்கப்படுகிறது. வீட்டு அலங்காரப் பொருட்கள், விளக்குகள் மற்றும் இன்னும் பல பொருட்களை அங்கு காணலாம். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தவிருக்கிறது.
உள்ளூர் விற்பனையாளர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு கொடுக்கப்படும். கடை வைப்பவர்களுக்கான தினசரி வாடகை 55 வெள்ளி. இதன் வரலாற்றிலேயே முதன்முறையாக நீண்டகாலச் செயல்படும் நோன்பு பெருநாள் சந்தையாக இருக்கும்.