உத்தரவை மீறிய விவசாயிகள்!! விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

நவம்பர் 16ஆம் தேதி அன்று இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 509 ஆக பதிவானது. இது மிகவும் ஆபத்தானதாக வகைப்படுத்தப்பட்டது.

புதன்கிழமை அன்று ஏற்பட்ட பண்ணைத் தீயால் நிலைமை மிகவும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

புதுடெல்லியில் காற்று மிகவும் மாசுடைந்துஇருப்பதால்பயிர் எச்சங்களை எரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

ஆனால் இந்த தடையை மீறி பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் செயல்பட்டுள்ளனர். சுமார் 2500க்கும் மேற்பட்ட பண்ணையில் பயிர் எச்சங்களை எரித்துள்ளனர். இதனால் நச்சுப் புகையானது காற்றில் கலந்தது.

புது டெல்லி மீண்டும் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியது.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய விவசாயிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கூறியது.

செயற்கை மழையை தூண்டுவதற்கான சூழ்நிலை தற்போது இல்லாததால் அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.