நம் நாட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சன் டிவி சீரியல்கள் ஓடுவது மட்டுமே வழக்கம். ஆனால் ட்ரெண்டை மாற்றி இளைஞர்கள் மற்றும் சிறுவர்களையும் சீரியலின் பக்கம் இழுத்தது கொரியன் சீரியலின் தனி திறமை எழலாம்.
அதில் வரும் கதாபாத்திரங்கள், நடிகர்கள் மற்றும் கதைகள் இவை யாவும் இளைஞர்களை கவரும் வண்ணம் புதுவித பாணியில் இருந்ததால் அனைவரும் விருப்பப்பட்டு பார்க்க ஆரம்பித்தனர்.
அதற்கும் மேல் கொரியன் சினிமா மற்றும் டிராமாவில் நடிப்பவர்களுக்கு தீவிர ரசிகர்களும் நம் நாட்டில் உள்ளனர். இந்நிலையில் பிரபல கொரியன் நடிகை பார்க் சூ ரியன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார் என்ற சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த அவர் மூளைச் சாவு அடைந்ததால் அவரின் உடல் உறுப்புகளை பெற்றோர்கள் தானமாக அளித்துள்ளனர். 29 வயதான பார்க் பல சீரியல்களில் நடித்துள்ளார். அதில் அவர் நடித்த ஸ்னோ டிராப் என்ற சீரியல் அவருக்கு புகழினை பெற்று தந்தது.
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் கிளம்பி கொண்டிருந்த நிலையில் ஜூன் 11 அன்று மாடிப்படி இருந்து தவறி விழுந்துள்ளார். சுயநினைவை இழந்த அவரை மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிரமான சிகிச்சை அளித்துள்ள நிலையில் பயனளிக்காமல் சற்று முன் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தைரியத்தை இழக்காத நடிகையின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிப்பதாக கூறியுள்ளனர். தன் மகள் இறந்தாலும் அவரது உறுப்புகள் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கட்டும் என்ற நல்ல செய்தியினை கூறி இந்த செயலினை செய்துள்ளது.
மேலும் அவரது தாய் செய்தியாளரிடம் கூறிய பொழுது” என் மகளின் மூளை செயலிழந்து விட்டது ஆனால் இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள். அவள் இருந்தாலும் அவளது இதயம் எங்கோ ஒரு மூலையில் துடித்துக் கொண்டிருப்பதை நினைத்து நாங்கள் நிம்மதியாக இருப்போம்”என்று உருக்கமாக கூறினார்.
நேற்று (ஜூன் 12) அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றதை பற்றியும்,இன்று (ஜூன் 13) அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 1994 ஆம் ஆண்டு பிறந்த பார்க் இசையல்பம் மூலம் கொரிய உலகிற்கு அறிமுகமாகி தனது 29 வயதிலேயே புகழ்பெற்ற நடிகையாக விளங்கினார்.
இந்நிலையில் நடிகையின் திடீர் மறைவு கொரிய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.