குடும்பத்தினர் அதிர்ச்சி..!!! கடத்தல் கும்பலின் வலையில் சிக்கிய மலேசிய இளைஞர்..!!!

குடும்பத்தினர் அதிர்ச்சி..!!! கடத்தல் கும்பலின் வலையில் சிக்கிய மலேசிய இளைஞர்..!!!

சிங்கப்பூரில் மாதம் 3,300 வெள்ளிச் சம்பளத்தில் சமையல்காரராக வேலை கிடைத்துவிட்டதாக நினைத்த மலேசியர் ஒருவரை கம்போடியாவிற்கு கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

25 வயதான அந்த நபருக்கு 21 வயதில் மனைவி மற்றும் மூன்று மாத குழந்தை உள்ளது.

அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தாவிட்டால் அவரை மீண்டும் விற்றுவிடுவதாக கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர்.

வேலை கிடைத்து விட்டதாக நினைத்த இளைஞர் மார்ச் 5 ஆம் தேதி சபாவிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டார்.

சிங்கப்பூரில் அவர் தங்கி இருக்கும் இடம் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் மார்ச் 22 அன்று தனது மருமகனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்ததாக மாமியார் கூறினார்.

அதில் அவர் கம்போடியாவிற்கு கடத்தப்பட்டதாகவும், அவரை மீட்பதற்கு 9,300 வெள்ளி தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது மருமகனுடன் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் பேசியதாகவும், அவரது உடல்நிலை மோசமடைந்ததை உணர்ந்ததாகவும் மாமியார் கூறினார்.

இச்சம்பவம் குறித்து மாமியார் காவல்துறையினரிடம் உதவி கோரியுள்ளார்.

மலேசிய மனிதாபிமான அமைப்பின் உதவியையும் அவர் நாடியுள்ளார்.

அந்த நபரைப் பாதுகாக்க கம்போடியாவில் உள்ள மலேசிய தூதரகத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சகத்திடம் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.