போலி வெடிகுண்டு மிரட்டல்!! வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் – சிங்கப்பூர் காவல்துறை!!

போலி வெடிகுண்டு மிரட்டல்!! வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் - சிங்கப்பூர் காவல்துறை!!

அக்டோபர் 15-ஆம் தேதி சுமார் 8.25 மணியளவில் இந்தியாவின் மதுரையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு AXB 84 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் வாயிலாக சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்தார்.

பிற்பகல் சுமார் 1.50 மணியளவில் மதுரையிலிருந்து புறப்பட்ட விமானம் சிங்கப்பூரில் இரவு 8.50 மணியளவில் தரையிறக்க திட்டமிடப்பட்டதாக Flightradar24 இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் RSAF F-15SG போர் விமானங்களின் வழிகாட்டுதலின் பேரில் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 10.04 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதாக காவல்துறை கூறியது.

விமானத்தில் பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொண்டதில் மிரட்டல் சம்மந்தமான பொருட்கள் ஏதும் இல்லை என்பதை காவல்துறை தெரிவித்தது.

பொது மக்களிடையேவேண்டுமென்றே பீதியை ஏற்படுத்துவார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தனர்.