தீவிர வானிலை மாற்றம்…….வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்…… மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்த அவலம்…..

மியான்மரின் பாகோ நகரத்தில் 200 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்ததால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்பகுதியில் வசிக்கும் சுமார் 14,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து உணவு மற்றும் உடைமைகளை எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

101 வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது வாழ்நாளில் இது போன்ற சம்பவம் நடந்ததே இல்லை என்றும், வீடுகள் வெள்ளத்தில் மூழ்குவது இதுவே முதல் முறை என்றும் கூறினார்.

அரசாங்கத்தின் தற்காலிக நிவாரண மையங்களில் கிட்டத்தட்ட 5600 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூலை மாதம் முதல் ஏற்பட்ட வெள்ளத்தால் மியான்மரின் 9 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றமே, இந்த தீவிர வானிலை மாற்றத்திற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.