மார்ச் 7-ஆம் தேதி காலை 8.55 மணியளவில் உபி ரோட்டில் உள்ள Audi சேவை கட்டடத்தில் மாபெரும் வெடிப்புச் சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்குக் தகவல் கிடைத்தது.
இந்த சம்பவத்தால் 100 பேர் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த வெடிப்பு சம்பவத்தின் போது கட்டடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
Raffles மருத்துவமனைக்கு காயம் அடைந்தவர் அழைத்துச் செல்லப்பட்டார்.இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தது.
தற்போது Audi சேவை மையம் மூடப்பட்டுள்ளது.
குடிமைத் தற்காப்புப் படை Audi சேவைக் மையக் கட்டடம் பாதுகாப்பாய் உள்ளது என்று உறுதிப்படுத்தியதாக Audi கூறியது.வார இறுதிக்குள் வேலைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறியது.