சிங்கப்பூரில் தேர்தல் எப்போது வரும் என்பதை எதிர்பார்க்கலாம்!!

சிங்கப்பூரில் தேர்தல் எப்போது வரும் என்பதை எதிர்பார்க்கலாம்!!

சிங்கப்பூர் தேர்தல் துறை தொகுதி எல்லைகளை மறுபரிசீலனை செய்யும் குழு கூட்டப்படவில்லை என்று கூறியுள்ளது.இதன் முக்கியமான நடவடிக்கை என்பது பொது தேர்தலுக்கு முன் தொகுதிகளை மறு ஆய்வு செய்யும் குழுவை கூட்டுவது.

அந்த குழு தொகுதிகளை மறு ஆய்வு குழு கூட்டப்பட்ட பின் நான்கு மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்கு இடையே பொதுத்தேர்தல் குறித்த தகவல் அறிவிக்கப்படும். வரும் மே 15 ஆம் தேதி அன்று பிரதமர் லீ சியென் லூங் தனது பொறுப்பிலிருந்து விலகுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் லாரன்ஸ் வோங் மே 15-ஆம் தேதியன்று பிரதமராக பொறுப்பேற்பார். அவரிடம் தனது பொறுப்பை லீ ஒப்படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025-ஆம் ஆண்டுக்குள் நவம்பர் மாதம் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும்.எனினும், சில அரசியல் வல்லுநர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள்ளேயே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அவர்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். அந்த குழு தற்போதைய தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மதிப்பீட்டு செய்யும்.

அதோடு மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் வீட்டு வசதிகள் போன்றவற்றில் உள்ள மாற்றங்களை கருத்தில் எடுத்து கொள்ளும். வாக்காளர்களின் எண்ணிக்கையையும் கருத்தில் எடுத்து கொண்டு அதன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். குழுப் பிரதிநித்துவத் தொகுதிகளை (GRCs) சிங்கப்பூர் நீக்கியது.நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்காக உயர்த்தப்பட்டது.GRCs ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு என்பது குறிப்பிடத்தக்கது.