சிங்கப்பூர் தச்சரால் போப் பிரான்சிஸ்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக நாற்காலி…!!!

சிங்கப்பூர் தச்சரால் போப் பிரான்சிஸ்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக நாற்காலி...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் வரவிருக்கும் போப் பிரான்சிஸுக்காக இரண்டு மர நாற்காலிகள் தயாரிக்கப்படுகின்றன.

போப் பிரான்சிஸ் வரும் புதன்கிழமை (செப்டம்பர் 11) சிங்கப்பூர் வருகிறார்.

சிங்கப்பூர் தச்சுத் தொழிலாளியான கோவிந்தராஜ் முத்தையா எனும் 44 வயதான தச்சர் அந்த மர நாற்காலியை வடிவமைத்தார்.

இந்த மர நாற்காலி முழுவதும் கையால் ஆன வேலைபாடுகளை கொண்டது மேலும் இதை ஒரு மாதத்திற்குள் வடிவமைத்துள்ளார்.

போப் பிரான்சிஸ் சிங்கப்பூருக்கு வருகை தருவதற்கு முன்னதாக அவருக்கு நாற்காலிகளை வடிவமைப்பதற்காக ஒரு சிறப்பான ஆர்டரைப் பெற்றார்.

87 வயதான போப் பிரான்சிஸ் ஆசிய-பசிபிக் சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக செப்டம்பர் 11 முதல் 13 வரை சிங்கப்பூரில் இருப்பார்.

நாற்காலியானது தனித்தன்மையுடன் போப் பிரான்சிஸுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாற்காலியின் தலையணியானது செயின்ட் அல்போன்சஸ் தேவாலயம் என்றும் அழைக்கப்படும் பழைய நோவேனா தேவாலயத்தின் முகப்பால் ஈர்க்கப்பட்டது. அதில் மூன்று வளைவுகளும் வட்ட வடிவ கண்ணாடி ஜன்னல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நாற்காலியில் B- வடிவ ஆர்ம்ரெஸ்ட் உள்ளது.இது போப் பிரான்சிஸின் குடும்பப் பெயரான பெர்கோக்லியோவுக்கு மரியாதை சேர்க்கும் வகையில் அமைந்தது நாற்காலியின் மற்றொரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரர் கோவிந்தராஜ் வடிவமைத்த நாற்காலிகள் போப் பிரான்சிஸ் நிகழ்த்தும் மதங்களுக்கு இடையிலான உரையாடல் நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட உள்ளது.

 

Follow us on : click here ⬇️