Latest Sports News Online

சிங்கப்பூரில் மீன் வியாபாரிடம் லஞ்சம் பெற்ற NTUC Fairprice முன்னாள் அதிகாரி!

சிங்கப்பூரில் மீன் விற்பனையாளரிடமிருந்து லஞ்சம் வாங்கிய NTUC Fairprice நிறுவனத்தின் முன்னாள் குழு தலைவர் மீது குற்றச்சாட்டப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அவர் 8 ஆண்டாக 70 வயதுடைய See Hock Lam என்ற மீன் வியாபாரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

நிறுவனத்தில் நீங்களே யாரிடம் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தில் See இருந்துள்ளார். அதனை அவருக்கு சாதகமாக ஆக்கி விற்பனையாளர்களுக்கும் சாதமாக செயல்பட்டுள்ளார்.

அவர் மீது இதன் தொடர்பாக இருந்த 10 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

இந்த குற்றத்திற்காக அவருக்கு 3 ஆண்டு 2 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் 260,000 வெள்ளிக்கு மேல் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.

இதனை அவரால் கொடுக்க முடியவில்லை என்றால், இன்னும் கூடுதலாக 523 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.