அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தல்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டு மே மாதம் வரை 653 சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகள் மற்றும் பொது வீதிகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
கடந்த மூன்று வருடங்களில் மீண்டும் அதே குற்றத்தைச் செய்தவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே இருப்பதாக அவர் கூறினார்.
முதல் முறை சைக்கிளோட்டி குற்றம் புரியும் குற்றவாளிகளுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சாலையில் அதிவேகமாக சைக்கிள் ஓட்டினால் அவர்கள் சைக்கிள் ஓட்டுதல் பயிற்சி வகுப்பில் சேர்க்கப்படுவார்கள்.
போக்குவரத்து அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சாலையைப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் அனைவரும் நடந்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்படுவதாக கூறினார்.
Follow us on : click here