எங்க டிராக் சரியா இருந்தாலும்.. எங்களோட தோல்விக்கு இதுதான் காரணம்..!!ஜோஸ் பட்லர் பேட்டி...!!!!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 3-0 (3) என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிருபித்துள்ளது.
பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்தியாவுக்கு 357 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அடில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், துணை கேப்டன் கில் 112 ரன்களும் எடுத்தனர். அடுத்து சிறப்பாக விளையாடிய இந்தியா இங்கிலாந்தை 34.2 ஓவரில் 214 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்றது.
இந்தியாவின் வெற்றி:
இங்கிலாந்து அணி சார்பில் டாம் பாண்டன் மற்றும் கஸ் அட்கின்ஷன் ஆகியோர் தலா 38 ரன்கள் எடுத்தனர்.இந்திய தரப்பில் ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப், அக்சர் படேல் ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்தியா வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்கிறது.
இங்கிலாந்தின் தோல்வி:
இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டி ஒன்றில் கூறியதாவது, இந்த சுற்றுப்பயணத்தில் தங்களது அணுகுமுறை சரியாக இருந்தாலும் அதை சரியாக செயல்படுத்தாததே தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
இந்த 5 T20, 3 ODI சுற்றுப்பயணத்தில் 7 போட்டிகளில் தோல்வியடைந்த காரணத்தை கூறியுள்ளார். அவர், “எங்கள் பேட்டிங்கைப் பொறுத்தவரை, முழு சுற்றுப்பயணமும் ஒரே மாதிரியாக இருந்தது. நாங்கள் ஒரு அற்புதமான அணியால் தோற்கடிக்கப்பட்டோம்.பேட்டிங்கில் எங்களது அணுகுமுறை சரியாக இருந்தது” என்றார்.
ஆனால் அதை களத்தில் செயல்படுத்த முடியவில்லை. இந்தியா முதலில் பேட்டிங் செய்து அபாரமாக ஆடியது. சுப்மன் கில் மிகச் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். நாங்கள் ஒரு நல்ல தொடக்கத்தை எடுத்தோம்.ஆனால் அதை மீண்டும் சரியாக பயன்படுத்தவில்லை.எனவே நீண்ட நேரம் பேட்டிங் செய்வதற்கான வழியை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த சுற்றுப்பயணத்தில் வலுவான அணிக்கு எதிராக விளையாடியது சவாலாக இருந்தது என்று பாராட்டி பேசினார். முன்னதாக 3-0 என்ற கணக்கில் தோற்றாலும், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு திறமை உள்ளதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தைச் சந்திக்க தயாராக உள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan