Latest Tamil News Online

எரிசக்தி சந்தை ஆணையம் மின்சார சில்லறை வர்த்தகர்களுக்கு புதிய நிபந்தனை!

சிங்கப்பூரின் மின்சார சில்லறை வர்த்தகங்களுக்கு புதிய நிபந்தனைகள் அறிமுகம் செய்யப்பட போவதாக எரிசக்தி சந்தை ஆணையம் தெரிவித்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் பல சில்லறை வர்த்தக நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறியது, அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. உலக சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சிங்கப்பூரில் மின்சார சந்தையைப் பெரிதும் பாதிக்கிறது.

சிங்கப்பூரில் உள்ள மின்சாரச் சில்லறை வர்த்தகங்களுக்கு தேவையான போதுமான நிதி இருப்பதை உறுதி செய்யவதற்கு இந்த புதிய நிபந்தனையை நிறைவு செய்ய வேண்டி வரலாம் என்று தகவல் தெரிவித்தது.

எரிசக்தி சந்தை ஆணையத்தின் ஆலோசனை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.மின்சாரத்தைச் சொந்தமாக உற்பத்தி செய்யாமல் மின்சாரத்தை மற்றவர்களிடம் இருந்து வாங்கி, சில்லறை நிறுவனங்கள் தொழில் செய்து வருகிறது.இது போன்ற சில்லறை நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்தது.

சந்தை நிலவரத்தை கையாளுவதற்கு மின்சார சில்லறை வர்த்தகர்களிடம் போதுமான நிதி இருக்கிறதா என்பதையும் உறுதி செய்யப்படும் என்றும் ஆணையம் தெரிவித்தது.