கவனக்குறைவால் பறிபோன ஊழியரின் உயிர்!! சூப்பர்வைசருக்கு கிடைத்த தண்டனை!!

கவனக்குறைவால் பறிபோன ஊழியரின் உயிர்!! சூப்பர்வைசருக்கு கிடைத்த தண்டனை!!

சிங்கப்பூரில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ஆம் தேதி Royal Plaza on Scotts ஹோட்டலின் வெளிப்புறத்தில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்த ஊழியர் சுந்தரராஜன் மாணிக்கராஜா கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் வேலைப் பார்த்து கொண்டிருந்த போது கயிறு அறுந்ததால் சுமார் 62 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் அவர் உயிர் பிரிந்தது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சூப்பர்வைய்சராக பணிப் புரிந்த ராமு மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

36 வயதுடைய ராமு கோபிநாத் CKR Contract Services நிறுவனத்தில் பெயிண்ட் சூப்பர்வைய்சராக வேலைப் பார்த்து வந்தார்.

பெயிண்ட் வேலை நடைபெற்று கொண்டிருக்கும் போது வாகனங்களைத் திசைத்திருப்ப `Banksmen’ இருக்க வேண்டும். ஆனால் அன்றைய தினம் பணியாளர் இருக்கிறாரா? என்பதை அவர் உறுதி செய்ய தவறிவிட்டார். விசாரணையில் அது தெரிய வந்தது.

கயிறு அங்கு வந்து கொண்டிருந்த பேருந்தின் Side mirror – இல் சிக்கி அறுந்தது.

அதனால் சுந்தரராஜன் உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.

ராமு கவனக்குறைவாக செயல்பட்டதே சுந்தரராஜன் மரணத்திற்கு காரணம் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெயிண்ட் சூப்பர்வைய்சர் ராமுக்கு 7 மாத சிறைத் தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது.