சிங்கப்பூரில் அடுத்த மாதம் 3-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31-ஆம் தேதி வரை குறிப்பிட்ட சில குடும்பங்களிடம் கருத்தாய்வு நடத்தப்படும் என மனிதவள அமைச்சகம் கூறியது.
அஞ்சல் வழி மூலம் வீடுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்படும்.
அந்த கடிதத்தில் இணைய கருத்தாய்வுக்கான முகவரி குறிப்பிட்டிருக்கும் அதில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்க வேண்டும்.
அந்த இணைய கருத்தாய்வில் குடும்பத்தார் பற்றிய விவரமும் , வேலை சம்பந்தப்பட்ட தகவலும் கேட்கப்படும்.
இந்த கருத்தாய்வில் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்த உதவக் கூடிய அமைப்புகளை அமைப்பதற்கு உதவும் என கூறப்பட்டது.
வருடாந்திர ஊழியரணி கருத்தாய்வை மனிதவள அமைச்சகம் தொடங்கவுள்ளது.
மனிதவள ஆய்வு,புள்ளிவிவர பிரிவு கருத்தாய்வை வேலை சந்தை பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக அமைச்சகம் நடத்துகிறது.