15 ஆண்டுகளுக்கு பிறகு சகோதரியுடன் சேர்ந்த யானை!! சில நாட்களிலேயே நேர்ந்த சோகம்!!
பாகிஸ்தானில் ஒரு யானை தனது சகோதரியுடன் மீண்டும் இணைந்த சில வாரங்களில் இறந்தது.
கராச்சி சஃபாரி பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
யானைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக பூங்கா இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சோனியா என்ற ஆப்பிரிக்க யானைக்குக் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனையின் போது நன்றாக இருந்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் சோனியாவும் அதன் சகோதரி மதுபாலாவும் ஒன்று சேர்ந்தனர்.
இரண்டு யானைகளும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தன.
இவர்களுக்கு மேலும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
2009 ஆம் ஆண்டில், நான்கு சகோதரிகள் உட்பட சில யானைகள் ஆப்பிரிக்கா காடுகளில் பிடிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டன.
நூர்ஜஹான் மற்றும் மதுபாலா ஆகியோர் கராச்சி உயிரியல் பூங்காவிற்குச் சென்றனர்.
நூர்ஜஹான் கடந்த ஆண்டு 2023 இல் இறந்தது. சோனியாவும் மலிகாவும் சஃபாரி பூங்காவிற்கு அனுப்பப்பட்டனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் மீதமுள்ள மூன்று சகோதரிகளும் மீண்டும் இணைந்தனர்.
மூன்று சகோதரிகளும் ஒன்றாக இருக்கும் தருணத்தில் சோனியா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow us on : click here