டோக்கியோவில் `சூப்பர் ஸ்பைசி’ சிப்ஸை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

டோக்கியோவில் `சூப்பர் ஸ்பைசி' சிப்ஸை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

டோக்கியோ: டோக்கியோவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் காரமான உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தது.

பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவேளையின் போது உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டனர். அதனால் அவர்களுக்கு குமட்டல் மற்றும் வாய் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் 14 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனைக்கு மாணவர்கள் கொண்டு செல்லப்படும் பொழுது சுயநினைவுடன் இருந்ததாகவும்,ஆனால் ஒருவருக்கு மட்டும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறினர்.
அவர்கள் சக்கர நாட்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சிப்ஸ் பாக்கெட்டில் R18+ curry chips என்ற பெயரைக் கொண்டுள்ளதாக Asahi Shimbun மற்றும் Fuji tv உள்ளிட்ட உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிடக்கூடாது. அவை மிகவும் காரமாக இருக்கும்,வலியை உண்டாக்கும் என்று அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

கோஸ்ட் பெப்பர் என்று கூறப்படும் சூடான மிளகு ஒன்றை மூலப்பொருளாக பயன்படுத்துகிறோம் என்று கூறியது.

 

Follow us on : click here ⬇️